கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்களுக்கு கடற்படையினர் கவுரவம்

தூத்துக்குடி  கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்களுக்கு கடற்படையினர் கவுரவம் – தூத்துக்குடியில் கடற்படை ரோந்துக்கப்பலில் வண்ண விளக்குகள் எரியவிடப்பட்டன

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முதல்நிலை பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையில் ஹெலிகாப்டர்கள் மூலம் நாடுமுழுவதும் மருத்துவமனைகளின் பூ தூவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்திய கடலோர காவல்படையின் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக  கடற்படை ராணுவத்தினர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடந்தது.
தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சி.ஜி.அபிராஜ், சி.ஜி.ஆதேஷ் ஆகிய இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அருகே நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன. கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக அந்த கப்பலில் சிறப்பு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு எரியவிடப்பட்டன. சுமார் 15 நிமிடங்கள் விளக்குள் தொடர்ந்து எரிந்தன. கப்பலிலிருந்து வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டும் ஒலியெழுப்பியும் மருத்துவ பணியாளர்களை கடற்படையினர் கவுரவித்தனர்.