100 ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவி : மாப்பிள்ளையூரணி சுகாதார ஆய்வாளர் வில்சன்

கொரானா வைரஸ் தொற்று நோய் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவினால் பலர் பலவிதமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் சிரமப்படும் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக மாப்பிள்ளையூரணியின் சுகாதார ஆய்வாளர் வில்சன் அவர்கள் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் ரூ1,25,000 சேகரித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1500 மதிப்புள்ள 10 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறிகளை அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு அளித்து உதவினார்.