ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலியாவூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் ஆறுமுகம்(49). இவர் கடந்த 16.02.2020 அன்று கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியுள்ளார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

மேற்படி எதிரி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முறப்பநாடு காவல்நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி ஆறுமுகம் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல்நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் எதிரி ஆறுமுகத்தை இன்று (29.05.2020) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தார்.