மாலத்தீவின் முன்னாள் துணைஜனாதிபதி சிறையில் இருந்து தப்பி வந்துள்ளாரா

தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ம் தேதி மாலத்தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற டக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த 8 மாலுமிகளும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த டக்கில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.

இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து உளவுத்துறையினர் நடுக்கடலில் டக்கில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மாலத்தீவின் முன்னாள் துணைஜனாதிபதி என தெரிய வந்துள்ளது.
புதிய அரசு அமைந்ததால் விடுதலை ஆகி வெளியே வந்துள்ளாரா அல்லது சிறையில் இருந்து தப்பி வந்துள்ளாரா என உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.