மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : மோதிரம் வழங்கி மகிழ்ந்தார் திருமதி.கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி கீதா ஜீவன் அவர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி மகிழ்ந்தார். அவருடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் மற்றும் ஆனந்த சேகரன் அவர்கள், ராஜ்மோகன் அவர்கள், கஸ்தூரி தங்கம் அவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.