தூத்துக்குடியில் வசிக்கும் நண்பர்களின் மேலான கவனத்திற்கு, தாங்கள் அறிந்த வகையில் உண்மையிலே வீட்டை விட்டு வெளியே வரமுடியாத ஆதரவற்ற வயதான, அல்லது ஊனமுற்றவர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் இருந்தால்., அவர்களுக்கு எங்கள் வீடுகளில் தயார் செய்த மதிய உணவை வழங்க தயாராக இருக்கிறோம். கடந்த ஐந்து நாட்களாக நல் உள்ளம் படைத்தவர்களின் உதவியோடு அவரவர் வீடுகளில் தயார் செய்த மதிய உணவை தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் வாயிலாக குறைந்தது 150 பேர்களுக்கு வழங்கி கொண்டு இருக்கிறோம். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் உண்மையாகவே உதவி தேவைப்படும் என்றால், தாங்கள் அறிந்தவர்களின் பெயர், விலாசம் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் போன்றவற்றை 94878 38297 என்ற எண் மூலம் Whats app ல் தெரிவிக்குமாறு தயவாய் கேட்டு கொள்கிறேன்.
