ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை கொரோனாவை கட்டுப்படுத்த லாக்-டவுன் ஒரு தீர்வல்ல -தமிழக மருத்துவ நிபுணர் குழு

பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும்,கொரோனாவை கட்டுப்படுத்த லாக்-டவுன் ஒரு தீர்வல்ல என்றும், மருத்துவக் குழு பேட்டியளித்தனர்

அதிக எண்ணிக்கையில் சோதனை செய்தால் அதிக cases வரத்தான் செய்யும். அதுகுறித்து கவலை கொள்ள தேவையில்லை, இறப்பு எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும், தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .சென்னை போன்ற பிற மாவட்டங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது

சென்னையில் கொரோனா இரட்டிப்பாகும் தன்மை குறைந்திருக்கிறது. இது வரவேற்க்கத்தக்கது. மற்ற மாவட்டங்களிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக அங்கே கொரோனா அதிகரித்து வருகிறது என மருத்துவர் குழுவை சேர்ந்த பிரப்தீப் கவுர் தெரிவித்தார்