லாக்-அப் மரணங்கள் தவிர்க்கப்படும் ,பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரம்புமீறினால் கடும் நடவடிக்கை – ஐ.ஜி. முருகன் எச்சரிக்கை

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரம்புமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளம் வழக்கில் உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் ஐ.ஜி.முருகன் உறுதியளித்தார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி. முருகன்,ஃப்ரெண்டஸ் ஆஃப் போலீஸ் என்பது ஓர் அமைப்புதானே தவிர காவலர்கள் இல்லை என்று கூறினார்.

காவல்துறை நண்பர்கள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் விசாரணையில் தலையிடமுடியாது என்றும் வரம்புமீறி தவறிழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்தார்.

சாட்சியம் அளித்த பெண்காவலர் ரேவதிக்கு, ஒருமாத விடுப்புடன் ஊதியம் வழங்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

லாக் -அப் மரணங்கள் நிகழக்கூடாது என்பதே காவல்துறையின் முக்கியநோக்கம் என்றும் லாக்-அப் மரணங்கள் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணை முறையில் அறிவியல் – தொழில்நுட்பரீதியாக நவீன வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் தென்மண்டல ஐ.ஜி.முருகன் உறுதியளித்தார்.