உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மறுநாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் ஆட்சியர்களுடனும் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.  

Credits : Polimer News