தொழில் தொடங்க ரூ.30 இலட்சம் மானியத்துடன் கடன் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும்; முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்கவும் முதலமைச்சர் அவர்களால் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21க்கு மேல் 35க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயானளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25மூ அரசு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.30 இலட்சம்) கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, CNC லேத் இயந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், உப்பு அரைத்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்/பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் Covid -19க்கு தேவையான மாஸ்க், PPE Kit ,ஸ்டீல் கட்டில் மற்றும் இதர அனைத்து தேவையான உபகரணங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் Covid -19 காரணமாக Online-ல் விண்ணப்பிக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். தற்போது ஊழுஏஐனு-19 காரணமாக தொழில்முனைவோர் பயிற்சியிலிருந்து மார்ச் 2021வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (0461-2340053, 2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கேட்டுக் கொண்டுள்ளார்கள்.