பனை சார்ந்த தொழில் செய்வோர்க்கு கடனுதவி

தற்போது ஊரடங்கு உத்தரவால் மூங்கில் கூடை, பனை நாாில் செய்யப்படும் கூடை மற்றும் பனை ஓலையில் செய்யப்படும் சிறுதொழில் செய்யும் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடன்குடி தண்டுபத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களான பனை பொருட்களை வைத்து பெட்டி, பாய்  உள்ளிட்ட பொருள்களை  வீட்டிலிருந்தே உற்பத்தி செய்பவர்களுக்கு மத்தியகால கடன் உதவியாக 42 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனை சங்க தலைவர் தண்டுபத்து ஜெயராமன் வழங்கினார். 
இரண்டு ஆண்டு தவணை காலத்தில் மொத்தம் ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெகதா ஜெயராமன், சங்கச் செயலாளர் ஜோதி பாத்திமா, சங்க உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, பால வனிதா, சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.