சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர்க்குழு மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு ரூ 19 லட்சம் கடனுதவியை தலைவர் லூர்துமணி வழங்கினார்.

சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளையில் உள்ள சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர்க்குழு மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் லூர்துமணி கலந்து கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா கோவிட் 19 கடன் 34 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ5000 வழங்கப்பட்டது. மேலும் 8 உறுப்பினர்களுக்கு மத்திய‌ காலக்கடனாக‌ ரூ.3.30 லட்சமும், 4 உறுப்பினர்களுக்கு விவசாய கடனாக ‌ரு.8.00 லட்சமும், ,3மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 7.70 ல‌ட்சம் கடன் என மொத்த‌ம் ரூ.19.00 லட்சம் கடனுதவிகளை வழங்கினார். இதில் மத்திய‌ கூட்டுறவு வங்கி கள‌ மேலாளர் தேவகுமார், சங்க‌ நிர்வாக‌க்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,அருள்ராஜ்,அமல்ராஜ், சங்க‌ செயலர் ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.