ஒரு நபரால் 3 மது பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும் – ஆந்திரா அரசு

ஆந்திர மாநில அரசு அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, அந்த வகையில் தற்போது லிக்கர் கார்ட் என்ற மைக்ரோசிப் பொருத்தப்பட்ட கார்ட் ஒன்றை அம்மாநில அரசு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி 25 வயது நிரம்பியவர்கள் தங்களது ஆதார் மற்றும் பேன் கார்ட் நகலை கொடுத்து அந்த லிக்கர் கார்டை, பெற்று கொண்டு ஐந்தாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த லிக்கர் கார்டை கொண்டு நாள் ஒன்றுக்கு ஒரு நபரால் 3 பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும், கூடிய விரைவில் இந்தத்திடட்ம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.