துப்புரவுப் பணியாளர்களுக்கு போதிய சம்பளம் அளிக்க வேண்டும் : மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜூனன்

துப்புரவுப் பணிகளில் நிரந்தரத் தொழிலாளா்கள் சொற்ப அளவிலும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் அதிகளவிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அவா்கள் கூடுதலான பணிகளை செய்து வருகின்றனா். அவா்களுக்கு கூடுதலாக ஒருமாத ஊதியம் சிறப்பு ஊதியமாக நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 624 வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டும், தூத்துக்குடியில் ரூ.324 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, உடனடியாக ரூ.624 வழங்கவும், இதேபோல் நகராட்சி, பேரூராட்சியில் ரூ. 432-ம், ஊராட்சிகளில் ரூ.355-ம் ஊதியம் உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது கரோனா தடுப்புப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு தரமான முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை தாராளமாக வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜூனன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.