அரசு பஸ்கள் வருவதை தெரிந்துகொள்ள ‘லேம்ப்-ஆப்’ – போக்குவரத்துத் துறை

தமிழகத்தில் அரசு பஸ்களில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு பஸ்கள் எப்போது வரும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 3,300 எம்டிசி பஸ்களில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அனைத்து அரசு பஸ்களிலும் ‘ஜிபிஎஸ்’ பொருத்தப்பட்டு வரும் ஜனவரிக்குள் அறிமுகம் செய்யவுள்ளோம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.