மாணவா்களுக்கு கல்வி பாிசு – கே.வி.கே. சாமி. பிறந்த நாள்

தூத்துக்குடியில் திமுகவின் முன்னாேடி கே.வி.கே.சாமி பிறந்தநாளை முன்னிட்டு  இரண்டு மாணவா்களுக்கு கல்வி பாிசு வழங்கப்பட்டது 
திமுகவின் முன்னாேடிகளுள் கேவிகே சாமியும் ஒருவர். திராவிட நாடு என்ற தனிநாடு உருவானால் அதன் கவர்னராக கேவிகே சாமி இருப்பார் என பெரியாரால் புகழப்பட்டவர். தூத்துக்குடியில் உப்பு தொழிலாளர் கூலி உயர்வுக்காக இவர் பாடுபட்டார். தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் விவிடி பள்ளியை நிறுவினார். 
அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நம்மஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ்அப் குழு சார்பில் விவிடி பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கல்வி பாிசு வழங்கப்பட்டது. பரிசுகளை ஒய்வுபெற்ற தோட்டக்கலை ஆசிாியா் அற்புதமணி வழங்கினாா். இந்நிகழ்ச்சியின் போது ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.