கோவிட் 19 சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கோவிட் 19 சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை துத்துக்குடி மாவட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தொடங்கி வைத்து உதவிகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மாற்று திறனாளிகளுக்கு நிதி உதவி என 387 பயனாளிகளுக்கு பயனடைந்தனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், தூத்துக்குடி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளவர்கள் கோவிட் 19 சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பயனடைவார்கள். இதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள், மாற்றுதிறனாளிகள், விதவைகள்,ஏழை எளிய மக்கள் முதலானோர்க்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 715 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17.94 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 20,845 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
514 பேர் கரோனா பாதிக்கப்பட்டனர். 329 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 182 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்க்காக மேலும் ஒரு ஆர்.டீ. பி.சி. ஆர் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் துத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.