வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்!

வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்!

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால் கிராமப்புற மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். விவசாய வேலைகளுக்கு கூலித் தொழிலுக்கு செல்ல முடியாமலும் வருமானம் இல்லாமலும் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் அருந்ததியர் காலனியில் 25 குடும்பங்கள் வறுமையில் தவித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் தனது சொந்த ஏற்பாட்டில் வறுமையில் வாடிய 25 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய்க்கான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். ஆய்வாளர் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Credits : கோவில்பட்டி வலைத்தள நண்பர்கள் குழு