இலவசமாக பேருந்துகளை இயக்கும் கோவில்பட்டி SSRBS நிறுவனம் – பொதுமக்கள் பாராட்டு

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன, இதனால் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வேலையை இழந்ததுடன், அன்றாட உணவுக்கே அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் வசதி படைத்த தாராள மனதுடையவர் முதல் நடுத்தர மக்களில் சிலர் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயங்கி வரும் SSRBS என்ற தனியார் பேருந்து நிறுவனம் COVID -19 ஆல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நிலையை கருத்தில் தனது இரண்டு பேருந்துகளை
கோவில்பட்டி – குருவிக்குளம், திருநெல்வேலி – கழுகுமலை ஆகிய வழித்தடத்தில் பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக இயக்கி வருவது பொது மக்களிடையே பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்களிடம் வாழ்நாள் முழுக்க வரி வசூலிக்கும் அரசாங்கம் கூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கறாராக வசூலிப்பதும், சொந்த மாநிலத்திற்க்கு செல்லும் ஏழை தொழிலாளர்களிடம் கெடுபிடியாக இரயில் கட்டணம் பெற்றதும், என இரக்கமற்ற நிலையில் நடக்கும் சூழலில், மக்களின் நிலை அறிந்து இலவசமாக பேருந்துகளை இயக்கும் கோவில்பட்டி SSRBS நிறுவனத்தையும், அதன் உரிமையாளரையும் பொதுமக்கள் வெகுவாக வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது