கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக கலைகதிரவன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெபராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து தூத்துக்குடி புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கலைகதிரவன் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் இன்று கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில்பட்டியில் நிகழும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கை பேணிகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக, ரவுடிசம், கஞ்சா உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் காவல் துறை தன் கடமையை செய்யும்.

கோவில்பட்டி காவல் சரகத்திற்கு உள்பட்ட மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். பொதுமக்கள் எந்தப் பிரச்னை என்றாலும் என்னை தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

கிரேடிட்ஸ்: கோவில்பட்டி வலைதள நண்பர்கள் குழு