கோவாக்ஸின் தடுப்பு மருந்து

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து வரும் 7ம் தேதி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கோவாக்ஸின் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.