தூ.டி கொரானா நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு அறை ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரானா நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி மண்டல கொரானா கண்காணிப்பு சிறப்பு அலுவலர்/ கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநர் முனைவர் மு.கருணாகரன் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார். பின்பு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மண்டல கொரானா கண்காணிப்பு சிறப்பு அலுவலர்/ கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநர் முனைவர் மு.கருணாகரன் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி, சிறப்பு காவல் அலுவலர் ஏடிஜிபி திரு மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையர் திரு வீ. பி. ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் வருவாய்த்துறை விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருநெல்வேலி மண்டல டிஐஜி திரு.பிரவின்குமார் அவினவ், இ.கா.ப லட்சம் அலுவலர்கள் உள்ளனர்.