கம்பாளா வீரர் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு – கிரண் ரிஜிஜூ

வேகமாக ஓடும் எருமை மாடுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் கூடவே ஓடுவார் இந்த விளையாட்டு கம்பாளா என அழைக்கப்படுகிறது. இது கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டு. இந்தப் போட்டியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற கம்பாளா போட்டியில் 142.5 மீட்டர் தூரத்தை வெறும் 13.62 வினாடிகளிலும் , 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்தார். இதில் வியக்கத்தக்கவது என்னவாயின் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார். அதுவே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. ஆனால் கம்பாளா வீரர் சீனிவாச கவுடா 9.55 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடாவுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *