அலட்சியத்தால் உயிர் பலி – பள்ளி முதல்வர், துணை முதல்வர் இடை நீக்கம்

கேரளா : வயநாடு மாவட்டம் சுல்தான் பாத்ரியிலுள்ள சர்வஜன அரசு உயர்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த மாணவி சேகலா ஷெரீன், கடந்த 20-ஆம் தேதி வகுப்பறையில் இருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்தாள். இந்த சம்பவத்தில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்காததே காரணம் என கூறப்படுகிறது. இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளி முதல்வர், துணை முதல்வரை இடைநீக்கம் செய்தும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தை கலைத்தும் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தாலுகா மருத்துவமனை மருத்துவரையும் கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது.