பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

இன்று (15.07.2020) மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் பாரத ரத்னா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரியின் செயலாளர் திரு. ராஜேந்திரன், பொருளாளர் திரு. முத்துச்செல்வன், துணை தலைவர் திரு. நடராஜன் மற்றும் இணை செயலாளர் திரு. சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த முகாமில் தூத்துக்குடி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர்கள் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.