கிராம பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு: தருவைகுளம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட தருவைகுளம் கிராமத்தில் 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு தருவைக்குளம் புனித நிக்கொலாசியார் ஆலயம் அருகில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இலவச கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக்குடிநீரை பெற்றுச் சென்றார்கள். இந்நிகழ்வில் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் (எ) பழம், காமராஜர் நற்பணி மன்ற பொருளாளர் தேவ திரவியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சூசை மிக்கேல், செல்வராஜ், பவுல் ராஜ், வில்சன், கிறிஸ்டின் ராஜ், வெல்லிங்டன், ராபின், கென்னடி ராஜ், ராஜன், கார்த்திக், ஜெயக்குமார்,கெய்ட்டின் ராஜ், டிக்கு ரோஸ், நீக்குலாஸ், பெட்ரிக், ராஜன், வில்சன், வழக்கறிஞர் வின்ஸ்ராஜா, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜா, சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி, மற்றும் பொதுநலத் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் S.A. லாரன்ஸ் அவர்கள் செய்திருந்தார்.