முதல் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு: ஆரோக்கியபுரம்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் முதல் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

25.06.2020 வியாழக்கிழமை இன்று காலை 9,00 மணியளவில் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் ஆரோக்கியநாதா் ஆலயம் முன்பு முதல் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊா்நிா்வாகிகள் தேவ சகாயம், குனசீலன், ரூபன் தலைமையில் திருக்குடும்ப சபையின் தலைவி சந்தனம், மாியாயின் சேனை தலைவி பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபசுர குடிநீரை தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல்துறை ஆய்வாளா் பிரேமா அவா்கள் வழங்கினாா்கள். மேலும் இந்நிகழ்வில் தருவைக்குளம் காமராஜா் நற்பனி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ் அவா்களும் சமூக ஆா்வலா் தொம்மை அந்தோனி அவா்களும் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள். பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக்குடிநீரை பெற்றுச் சென்றனா்