மூன்றாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு: ஆரோக்கியபுரம்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் மூன்றாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

இன்று காலை 9,00 மணியளவில் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் மிக்கேல் அதிதூதா் ஆலயம் முன்பு மூன்றாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊா் பொியவா்கள் பிரான்ஸிஸ் மற்றும் ஜேம்ஸ் அவா்கள் தலைமை தாங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள். பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக் குடிநீரை பெற்றுச் சென்றனா்.