தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

இன்று(06.07.2020) காலை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக தலைவர் திரு. விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் திரு. பாஸ்கர், பொருளாளர் திரு. ராஜலிங்கம், திரு. செந்தில் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் திரு. ராஜா, மாநில இளைஞரணி அமைப்பாளர் திரு. வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/m1OaN9jeSN4

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. காமராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.