கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு: பொத்தகாலன்விளை

சாத்தான்குளம் ஒன்றியம் பொத்தகாலன்விளையில் உள்ள சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக சுப்பிரமணியபுரத்தில் நியாயவிலை கடையில் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஏ.லூர்து மணி தலைமை வகித்து கடைக்கு வந்த அனைவருக்கும் கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கினார்.

சாஸ்தாவி நல்லூர்விவசாய நலச் சங்கத்தலைவர் எட்வின் காமராஜ், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக் கல்யாணி, கூடடுறவு சங்க செயலர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அருள்ராஜ், அமல்ராஜ் மற்றும் சாலமோன்.ஆசீர், சௌந்தரபாண்டியன். மில்ட்டன் தனுஷ்கோடி.இந்திரா. ஜெயந்தி. சகாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.