அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி. தினகரன் அவர்களின் ஆணைப்படி, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் மற்றும் தென் மண்டல பொறுப்பாளர், கடம்பூர் இளைய ஜமீன் S.V.S.P.மாணிக்கராஜா அவர்களின் ஆலோசனைப்படி, கழக அமைப்புச் செயலாளர் R.ஹென்றி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ம.புவனேஸ்வரன் அவர்களின் ஆலோசனைப்படி, கொரொனா எனும் கொடிய வைரஸ் இடமிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் விதமாக கபசுர குடிநீர் , தூத்துக்குடி முன்னாள் மேயர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மகளிர் அணி மாவட்ட செயலாளருமான A.P.R.அந்தோணி கிரேஸ் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் தாவீது ,சக்திவேல், முருகன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.