3ம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குலசேகரன் பட்டினம் கிளை சார்பில் 3ம் கட்டமாக குலசை பஞ்சாயத்துக்குட்பட்ட கல்லாமொழி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சுமார் 3000 நபர்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ரபிக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குலசேகரப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் குலசேகரப்பட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயலாளர் நூர்முகமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் குலசை கிளை செயலாளர் ஹஜ் முகைதீன் மற்றும் குலசை கிளையின் பொருளாளர் முஹம்மது சலீம் மற்றும் குலசை கிளையின் உறுப்பினர்கள் மற்றும் அம்ஜத் மீரான் ,ரிஸ்வான் , மன்சூர் ,சிராஜுதீன் சராபதுல்லாஹ் , அரஃபாத் , ரஜபு , தமீம், இம்தீயாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.