தருவைகுளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி: தூத்துக்குடி

கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது இதனால் பல சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இருந்து வரக்கூடிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் சென்னை மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தங்கள் கிராமத்தை தாங்களே காத்துக் கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகிறார்கள். காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த கிராமத்தில் உள்ள சுமார் 15,000 மக்களுக்கும் வாரத்துக்கு இரண்டு நாள் வீதம் கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்கள்.

அவசர தேவை என்றால் மருத்துவமனை கூட இல்லாத இந்த கிராமத்தில் கொரோனா தொற்றில் இருந்து கிராம மக்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் இங்கு உள்ள கிராம நிர்வாகிகள் இந்த முயற்சி எடுத்து வருகிறார்கள் இதன் காரணமாக இந்த கிராமம் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர் இதுபோல் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதும் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தான் உண்மை.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் (எ) பழம், காமராஜர் நற்பணி மன்ற பொருளாளர் தேவ திரவியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சூசை மிக்கேல், செல்வராஜ், பவுல் ராஜ், வில்சன், கிறிஸ்டின் ராஜ், வெல்லிங்டன், ராபின், கென்னடி ராஜ், ராஜன், கார்த்திக், ஜெயக்குமார்,கெய்ட்டின் ராஜ், டிக்கு ரோஸ் மற்றும் சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் S.A. லாரன்ஸ் அவர்கள் செய்திருந்தார்.