20 வது முறையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் வட்ட கோவில் அருகே நடைபெற்றது

மாநகர வர்த்தக அணி செயற்குழு உறுப்பினர் அந்தோணி சேவியர் ஏற்பாட்டின் பேரில் மாவட்ட துணை செயலாளர் தீரவாசகம் தலைமையில் மாவட்ட தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செந்தில் ஆறுமுகம் கபசுர குடிநீர் வழங்கினார் இதில் வடக்கு மண்டல செயலாளர் செல்வம் மற்றும் ஜெயபால், ராமர், ஏகாம்பரம், ரங்கன், மாரியப்பன் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கபசுரக் குடிநீர் இன்று 600 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 20 இடங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வாரமும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்