திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு : கனிமொழி எம்.பி.

திருச்செந்தூர் பேரூராட்சியில் பணியாற்றும் 86 தூய்மைப் பணியாளா்களுக்கு 25 கிலோ அரிசி, கை கழுவும் திரவம், சோப், பருப்பு, சமையல் எண்ணெய், காய்கனிகளை கனிமொழி எம்.பி (03.04.20) வழங்கினாா். .

தொடா்ந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்ச்சியின் போது, சட்டப்ரேவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.