காமராஜ் கல்லூரி NSS மாணவ மாணவிகளின் நாட்டு நலப் பணி

தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி NSS மாணவ மாணவிகளின் நாட்டு நலப் பணி சிறப்பு முகாமானது சிலுவைப்பட்டி ஊரில் கடந்த 7 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இந்த முகாமில் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர், கடைசி நாளில் இலவச மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் தூத்துக்குடியில் உள்ள nanotricks software company மூலம் நாட்டு நல பணிகள் சிறப்பாக செய்து முடித்த மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் Nanotricks team ரெக்ஸ், இஸ்ரேல், கிளாட்ஸன், செவின், பிராங்ளின், தமிழ் செல்வன் மற்றும் காமராஜ் கல்லூரி ஆசிரியர் கோபாலாகிருஷ்ணன், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.