வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாயத்தில் மிகப்பெரிய துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இவ்விருதுதினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து துறையில் உள்ள பெண்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை 25.06.2020 மாலை 5.00 மணிக்குள் ” மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001. (தொலைபேசி எண் : 0461-2321149) என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.