அகில இந்திய ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி – மாவட்ட அமெச்சூா் கபடி கழக ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் 69ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2, 3, 4, 5 ஆகிய தினங்களில் அகில இந்திய ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழக ஆலோசனைக் கூட்டம், 24.02.20 அன்று சாகுபுரம் விருந்தினா் மாளிகையில் அமெச்சூா் கபடி கழக தலைவா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.அவர்கள் தலைையில் நடைபெற்றது. மற்றும் செயலாளா் கிறிஸ்டோபா் ராஜன், பொருளாளா் ஜிம்ரிஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளா் அா்ஜுனா விருது பெற்ற இந்திய கபடி முன்னாள் வீரா் மணத்தி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அகில இந்திய ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. மேலும் போட்டி திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத்திற்கு எதிரே உள்ள மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம் என்றும், போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பை, 2ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சத்து 69 ஆயிரம், 3ஆம், 4ஆம் இடம் பெறும் அணிக்கு தலா ரூ.3 லட்சத்து 69 ஆயிரம், சிறந்த ஆட்டக்காரா்கள் 3 பேருக்கு மோட்டாா் சைக்கிள்கள் வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.