இந்திய மாணவர் சங்கத்தின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டி முத்துநகர் கடற்கரையில் நடைப்பெற்றது.
போட்டி விவரம்:
இதில் மொத்தம் 34 அணிகள் கலந்துகொண்டனர்.போட்டியின் முடிவில் முதல் பரிசை கரடிக்குடி அணியும், இரண்டாவது பரிசினை ரவிக்குமார்(தாளமுத்துநகர்) அணியும், மூன்றாவது பரிசினை அம்பேத்கார் அரசு மாணவர் விடுதியும், நான்காவது பரிசினை தேனி அணியும் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள்:
இப்போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக;
- உயர்திரு.அருண்பாலகோபாலன்,(காவல்துறை கண்காணிப்பாளர்,தூத்துக்குடி)
- உயர்திரு.பிரகாஷ்,(காவல்துறை துணை கண்காணிப்பாளர்,தூத்துக்குடி)
- தோழர்.மாரியப்பன்(SFI-மாநிலச் செயலாளர்)
- தோழர்.A.T.கண்ணன்(SFI-மாநிலத் தலைவர்)
- தோழர்.M.கண்ணன்(SFI-மாநிலத் துணை தலைவர்)
- தோழர்.பிரகாஷ்(SFI-மாநிலத் துணைச் செயலாளர்)
- தோழர்.நிருபன் சக்கரவர்த்தி(SFI-மாநிலத் துணைச் செயலாளர்,கபாடி விளையாட்டு வீரர்)
- தோழர்.சத்யா(SFI-மத்தியகுழு உறுப்பினர்)
கலந்து கொண்டனர்.