‘தலைவி’ படம் கற்பனை என அறிவிக்க வேண்டும்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘குயின்’ என்ற இணையத்தள தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘தலைவி’ திரைப்படம் தயாராகி வருகிறது.  இதனிடையே தலைவி திரைப்படத்திற்கும் குயின் தொடருக்கும் தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதன் விசாரணையில் தலைவி மற்றும் குயின் ஆகிய இரண்டுக்கும் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. மற்றும் தலைவி திரைப்படம் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *