”செய்தியாளர்கள் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும்”- நாசரேத்தில் மாவட்ட எஸ்.பி. வேண்டுகோள்!!

செய்தியாளர்கள் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என நாசரேத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

நாசரேத் காவல் நிலையம் திடீரென வருகைதந்த தூத் துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி.எஸ்.ஜெயக்குமாரை நாசரேத்தில் மரியாதை நிமித்தமாக செய்தியா ளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செய்தியாளர்கள் இருக்க வேண்டும், எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு உங்கள் பகுதி குறைகளை போன் மூல மாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ தெரியப்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசரேத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பேசினார்.

முன்னதாக நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையில் காவலர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு மரியாதை அளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது சாத்தான்குளம் போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) நாகராஜன்,நாசரேத் ஆய்வாளர் சகாயசாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.