ஜோக்கர்

ஆஸ்கர் விருதுகளை அல்ல 11 பிரிவுகளில் ஜோக்கர் போட்டி

கடந்து 2019ஆம் ஆண்டு வெளியாகி அவெஞ்சர்ஸ் படங்களுக்கு இணையாக வசூல் சாதனை புரிந்த ஜோக்கர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 11 பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதில் ஜோக்கர் திரைப்படம் சிறந்த திரைப்படம் சிறந்த தழுவல் கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அதேபோல நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட தியரிஸ் மற்றும் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வென்ற ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அதேபோல முதல் உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 1917 என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரசைட், மேரேஜ் ஸ்டோரி, லிட்டில் உமன் ஆகிய திரைப்படங்களும் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் தேர்வுக்குழு வரை இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய திரைப்படமான இயக்குனர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 கடைசி நேரத்தில் இறுதிப் பட்டியலில் இடம் பெறாமல் போனது. எனினும் கண்டிப்பாக ஆஸ்கரில் விருது வெல்லும் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பார்த்திபன் சபதம் எடுத்துள்ளார். மேலும் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-seithikkural