நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனம் என அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்: 259

பணி: Graduate Executive Trainee (GET)

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஜியாலஜி, நிதி, எச்.ஆர் போன்ற பிரிவிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.03.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.854. மற்ற பிரிவினர் ரூ.354 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை மே17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.