ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு – TNSPSS நிறுவனம்

தமிழக காவல்துறைக்கு உட்பட்ட Police Shorthand Bureau (SBCID) பிரிவின் கீழ் TNSPSS நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடத்தை நிரப்பதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம் :

ஜூனியர் ரிப்போர்டர் : 29

கல்வித் தகுதி :

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் ஆங்கில தட்டச்சு முடித்திருக்க வேண்டும், கூடவே கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/03/Tamilnadu-Police-Shorthand-Bureau-SBCID-Job.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2020