ஊராட்சித் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற ஆண்கள், பெண்கள்

சம்பளம்: ரூ. 15,700 முதல் 50,000

வயதுவரம்பு : அதிகப்பட்சமாக 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு ஆணையின் படி வயது தளர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய தள பக்கத்தில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்திற்கு சென்றோ விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்காலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.