வேலைவாய்ப்பு முகாம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியா் காலனி 1 ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.