தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்!!!

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியா் காலனி 1வது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

*முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது*

10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்போா் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.