மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள 30 உதவியாளர் காலிப்பணியிடங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள 66 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வருகிற 25-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.tntd-rb.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், இணைப்பதிவாளருமான ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.