தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள தட்டெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிர்வாகம் : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

பணி : தட்டெழுத்தாளர்

காலிப் பணியிடங்கள் : 56

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இப்பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதவைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.05.2020 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpcb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம்: https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB/