ஜியோவின் ஆட்டம் தொடங்கிவிட்டது….

முழுமையான பிளான்களை மாற்றியது ஜியோ.. ரூ.149 பிளானை தேர்ந்தெடுத்தால் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.1000 வரை மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்படி

ரூ.10 கட்டணத்திற்கு 124 நிமிடங்கள்
ரூ.20 கட்டணத்திற்கு 249 நிமிடங்கள்,
ரூ.50 கட்டணத்திற்கு 656 நிமிடங்கள்
ரூ.100 கட்டணத்திற்கு 1362 நிமிடங்கள்
ரூ.500 கட்டணத்திற்கு 7,012 நிமிடங்கள்
ரூ.1000 கட்டணத்திற்கு 14074 நிமிடங்கள் என மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசலாம்…

ஒரு வேளை டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மட்டும் போதும் என்றால் கூடுதல் டாப் அப் செய்ய அவசியமில்லை. ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்தை பயன்படுத்தினால் 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஜியோவில் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த கட்டணத் தொகையினை ‘ஐ.யூ.சி ரீசார்ஜ் வவுச்சர்கள்’ மூலம் செலுத்தலாம் என்றும், அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப இலவச டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஜியோபோனுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.49 திட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜியோபோன் ரூ.99 முதல் ரூ.594 வரை மட்டுமே கிடைக்க உள்ளது. மற்றும் பொதுவாக வழங்கப்பட்டு வந்த தினசரி 3ஜிபி டேட்டா பிளான் நீக்கப்பட்டுள்ளது.